உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

நெய்வேலி பள்ளியில் கூடுதல் கட்டணம் பெற்றோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

நெய்வேலி : 

                    நெய்வேலி குளூனி பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட் டதால் பெற்றோர் பள் ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                 தமிழக அரசு சமீபத்தில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தி சட்டம் இயற்றியது. ஆனால் நெய்வேலி குளூனி பள்ளியில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அரசு அறிவித்துள்ள ஆண்டு கல்வி கட்டணமான 4,705 ரூபாய்க்கு பதில் 14 ஆயிரத்து 250 ரூபாய் வசூலித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டவுன்ஷிப் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். "அரசு அறிவித்துள்ள கட்டணம் எவ்வளவு இருந்தாலும் அதை கட்ட நாங்கள் தயார். ஆனால் பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்துள்ள கூடுதல் கட்டணத்தை எங்களால் கட்ட முடியாது' என்றனர்.

பள்ளி முதல்வர் மாசிலாமேரி கூறுகையில், 

                  "கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்துள்ள கல்வி கட்டண பட்டியல் தவறானது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார். இதனைத் தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு "அரசின் மறு உத்தரவு வரும் வரை தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும், அரசு அறிவித்துள்ள கட்டணத்தை வசூலிக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார். முற்றுகையின் போது ஒரு சில பெற்றோர் ஆசிரியைகளை தரக்குறைவாக பேசியதை கண்டித்து ஆசிரியைகள் வகுப்பறைக்குள் செல்லமாட்டோம் எனக் கூறி பள்ளியை விட்டு வெளியேறினர்.

பள்ளி முதல்வர் குமுறல் : 

                 பள்ளி முதல்வர் மாசிலாமேரி மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழியிடம் "பள்ளி முதல்வர் பொறுப்பில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எம்.எல்.ஏ., எம்.பி., என்.எல்.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் என பலரும் தங்களது சிபாரிசுகளை ஏற்று அதன்படிதான் செயல்பட வேண்டுமென துன்புறுத்துகின்றனர். இதனால் என்னால் பள்ளியை சரியாக நிர்வாகம் செய்ய முடியாமல் திணறுகிறேன்' என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior