உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வில் கேள்வித்தாள் மாற்றம்


கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வில் கேள்வித்தாள் மாறியதால் தேர்வு மையத்தின் முன் கூடிய பெற்றோர்.
கடலூர்:
                  கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புத் தேர்வில் கேள்வித்தாள் மாறியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பெற்றோர் தேர்வுக் கூடத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 
                   கடலூர் திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மையத்தில் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடந்தன. இதில் தனித் தேர்வர்களாக 192 மாணவர்கள் கணிதப் பாடத்துக்கான தேர்வை எழுதினர்.இவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி கேள்வித்தாள் வழங்குவதற்குப் பதில் தெலுங்கு வழிக்கல்விக்கான கேள்வித்தாள் வழங்கப்பட்டு விட்டது. இதனால் மாணவ, மாணவியர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் பெற்றோரும் தேர்வு மையத்தை முற்றுகையிட்டனர். தேர்வு மைய அலுவலர்களிடம் முறையிட்டனர். தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தேர்வு மையத்துக்கு விரைந்து சென்று, மாணவர்களை சமாதானப்படுத்தினார். இதே பாடத் திட்டத்தில் தேர்வு எழுதும், வடலூர் மையத்தில் இருந்து தமிழ்வழிக் கல்வி கணிதத் தேர்வுத்தாள் வரவழைக்கப்பட்டது. அதில் இருந்து ஜெராக்ஸ் எடுத்து மாணவ, மாணவிருக்கு கேள்வித் தாள்கள் வழங்கப்பட்டது.இதனால் தேர்வு எழுத மாணவர்கள் பிற்பகல் 3 மணிவரை அனுமதிக்கப்பட்டனர். காலம் கடந்து தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதால் மானவர்களுக்கு தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior