உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

போலீஸ் மாநில விளையாட்டுப் போட்டி திருச்சியில் வரும் 26ம் தேதி துவங்குகிறது

கடலூர் : 

              போலீசாருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி வரும் 26ம் தேதி திருச்சியில் துவங்குகிறது.
 
            தமிழக போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களிடையே உள்ள விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆண் போலீசாருக்கு  ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், அப்ஸ்டல் (ஓடிச் சென்று சுவர் ஏறுதல்) போட்டிகளும், ஆண் மற்றும் பெண் போலீசார்களுக்கு வாலிபால், கூடைப்பந்து, கைப் பந்து, பூப்பந்து மற்றும் கபடி போட்டிகள் மண்டல அணிகளுக்கு இடையே நடக்கிறது.
 
             இந்தாண்டிற்கான விளையாட்டு போட்டி வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதிவரை மத்திய மண்டலத்தின் தலைமையிடமான திருச்சியில் நடக்கிறது. இந்த போட்டிகள் மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்கள், சென்னை மாநகரம், சென்னை புறநகர், ஆயுதப் படை மற்றும் கமண்டோ ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கிறது.
 
               இதில் பங்கேற்பதற்காக வடக்கு மண்டலத்தில் உள்ள போலீசார்கள்  பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதில் ஹாக்கி அணியினர் கடலூரிலும், வாலிபால் அணியினர் திருவண்ணாமலையிலும், கால்பந்து அணியினர் விழுப்புரத்திலும், கூடைப்பந்து, ஜிம்னாஸ் டிக், அப்ஸ்டல் (ஓடிச் சென்று சுவர் ஏறுதல்) வீரர்கள் வேலூரிலும், கைப் பந்து, பூப்பந்து அணியினர் காஞ்சிபுரத்திலும், கபடி அணியினர் திருவள்ளூரிலும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior