உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

கடலூரில் மத்தி மீன்கள் விலை வீழ்ச்சி

கடலூர்:

            கடலூரில் மத்தி மீன்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கிடைக்கும் மீன்களை கருவாடாக்கி விற்றால் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நிலையில் உள்ளனர்.

             கடலூரில் வஞ்சரம், பாறை, சங்கரா, கொடுவா, கெழுத்தி, கிளங்கான் போன்ற பல்வகை மீன்கள் பிடிபட்டாலும், மீனவர்களின் வருவாயை அதிகப்படுத்துவது அபரிமிதமாகப் பிடிபடும் மத்தி மீன்கள்தான். மத்தி மீன்கள் நாகை, தூத்துக்குடி போன்ற சேறும், சகதியும் நிறைந்த கடல் பகுதியில் உற்பத்தியாகி, நீரோட்டத்தில் கடலூர் கடல் பகுதிக்குக் கூட்டம் கூட்டமாக வருகின்றன. கடலூர் கரையில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள கடல் பகுதிகளில் மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. மத்தி மீன்கள் மக்களின் உணவுக்காக அதிக அளவில் கேரளத்துக்கும், மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 500 டன்கள் வரை பல நேரங்களில் மத்தி மீன்கள் கடலூரில் கிடைப்பது உண்டு. இவைகள் மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டு,100 லாரிகளில் நாள்தோறும் கடலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு போகப்படுகின்றன.

            கடந்த 4 நாள்களாக மத்தி மீன்கள் கணிசமாகக் கிடைத்தாலும் நியாயமான விலை கிடைக்கவில்லை என்கிறார்கள் கடலூர் மீனவர்கள்.÷மத்தி மீன் 60 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும்  நேரங்களும் உண்டு. கடந்த வாரம் ஒருபெட்டி மத்தி மீன் ரூ. ஆயிரம் மட்டுமே விலை போனது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அது ரூ. 300 ஆகக் குறைந்து விட்டது. அவ்வளவு குறைந்த விலைக்கு மீன்களை விற்பனை செய்ய மீனவர்கள் விரும்பவில்லை. கேரளத்துக்கு மீன்களை வாங்கிச் செல்ல வியாபாரிகளும் முன்வரவில்லை. கேரளக் கடற்பகுதியில் தற்போது வழக்கத்துக்கு மாறாக மத்தி மீன்கள் அதிகம் கிடைப்பதே, கடலூரில் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறுகிறார், கடலூர் மாவட்ட மீனவர் பேரவைத் சுப்புராயன். இதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விரும்பாத மீனவர்கள் பிடித்து வரும் மத்தி மீன்களை, கருவாட்டுக்காக பதப்படுத்தத் தொடங்கி இருப்பதாவும், கருவாடாக விற்பனை செய்தால் கூடுதலாக ஒருபெட்டிக்கு ரூ. 150 கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior