உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

நெய்வேலி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

நெய்வேலி : 

            நெய்வேலி செயின்ட் பால் பள்ளி ஆசிரியருக்கு சார்ஜ் மெமோ வழங்கி பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுத்ததால் சக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
           நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 4ல் உள்ள செயின்ட்பால் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் 6வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண் டும் என்பதை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் எதிரொலியாக, ஒரு ஒப் பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் புதிய ஊதியம் 6வது ஊதியக் குழுவின் பரிந் துரையின் படி வழங்கப்பட்டது. ஆனால் அகவிலைப் படியில் 7 சதவீதம் குறைத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத் தில்  அரசு வழங்கிய 8 சதவீத அகவிலைப்படி மற்றும் ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய 7 சதவீத அகவிலைப் படியையும் சேர்த்து 15 சதவீத அகவிலைப் படியையும் உடனே வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத் தனர்.
             ஆசிரியர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டதால் ஜூலை 22ம் தேதி முதல் தொடர் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். இந்நிலையில் சங்க செயலர் வைத்தியலிங்கத்திற்கு பள்ளி முதல்வர் அருள்நாதன் சார்ஜ் மெமோ வழங் கினார்.இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள் பள்ளி முதல்வரை கண்டித்து நேற்று காலை முதல் திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது.
               இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதல் வகுப்பு போன்ற வகுப்புகளில் படிக்கும் விவரம் தெரியாத வடலூர், விருத்தாசலம், பண்ருட்டி போன்ற வெளியூரை சேர்ந்த குழந்தைகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் முதல் வகுப்பு மாணவர் கோகுலகிருஷ்ணன் காணாமல் போனதால் ஆத்திரமடைந்த ஒரு சிலர் ஆசிரியைகளை ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.
              இதுகுறித்து, தகவல் அறிந்த டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர், சப் இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத் திற்குச் சென்று பள்ளி முதல்வர் அருள்நாதன் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவர் கோகுலகிருஷ்ணன் பள்ளி வளாகத்திற்குள் தனியாக அமர்ந் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior