பண்ருட்டி :
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகள் சீர் கேட்டை கண்டித்து நடைபெறும் போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டை கண் டித்து இறைபணி மன்றம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று (20ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து சமாதான பேச்சுவார்த்தை பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில் தார் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
இதில் அறநிலையத் துறை சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சேகர், கோவில் இறை வழிபாடு பணி மன்றத் தலைவர் ராமநாதன், ஆறுமுகம், ஜெயஸ்ரீதர், திருநாவுக்கரசர் உட் பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கோவில் சீர்கேடுகள் குறித்து அறநிலைய உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றால் மட்டுமே தீர்வு ஏற்பட முடியும் என தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து மீண்டும் இன்று (20ம் தேதி) மதியம் 12 மணிக்கு உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக