கடலூர் :
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க மாவட்டத்தில் முதல் முறையாக இன்டேன் நிறுவனம் "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மூன்று லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடலூர், நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலத்தில் ஒரு ஏஜென்சியும், இந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப் பேட்டையில் தலா ஒரு ஏஜென்சியும், பாரத் பெட் ரோலிய நிறுவனம் சார்பில் பண்ருட்டியில் இரண்டு, நெய்வேலி மற் றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜென்சி என மொத்தம் 15 காஸ் ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன. இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் காஸ் சிலிண்டர் தட்டுப் பாடு நிலவி வருகிறது.
வீட்டு உபயோக காஸ் இணைப்புகளுக்கு 21 நாட் களுக்கு ( தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பு திட்டத்தில் இணைப்பு பெற்றவர்களுக்கு 60 நாட்களுக்கு) ஒரு சிலிண்டர் வழங்க வேண்டும் என விதி இருந்தாலும் இதனை பெரும்பாலான ஏஜன்சிகள் பின்பற்றுவதில்லை. நிறுவனங்கள் நிர்ணயித்த காலக்கெடு முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகே சிலிண்டர்கள் வழங்குகின்றனர். இலவச காஸ் இணைப் புதாரர்களுக்கு மூன்று மாதத்திற்கு பிறகே மறு சிலிண்டருக்கு பதிவு செய் யப்படுகிறது.
காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பெரும்பாலான ஏஜென்சிகள் முறைகேடு செய்வதாகவும், அதன் காரணமாக சிலிண் டர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு ஓட்டல்கள் மற்றும் கார்களுக்கு விற்பனை செய்வதால் தான் தட்டுப் பாடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து "இன்டேன் காஸ்' நிறுவனம் ( இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) சிலிண்டர் வினியோகத் தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்த்திட முன் மாதிரியாக "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இணைப்பிற் கும் தனித் தனி நான்கு இலக்க எண் மற்றும் ஏஜென்சியின் பெயர் அடங்கிய "ஸ்டிக் கர்' வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது.
இன்டேன் நிறுவனத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஏஜென் சிகளில் ரேஷன் கார்டு மற் றும் காஸ் இணைப் பிற் கான "பாஸ் புக்'கை காண் பித்து பதிவு செய்து கொண்டு நான்கு இலக்க எண் கொண்ட 32 ஸ்டிக்கர் பெற்றுக் கொள்ள வேண் டும். அனைத்து ஸ்டிக்கர்களிலும் ஒரே எண் இருக் கும். ஒவ்வொரு இணைப் பிற்கும் வழங்கிய குறியீட்டு எண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். அதன்பிறகு சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும். வீட்டிற்கு சிலிண்டர் கொண்டு வருபவரிடம் சிலிண்டரை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதில் கையெழுத்து போட்டு, நிறுவனம் கொடுத்த ஸ்டிக்கரில் ஒன்றை அந்த ரசீதியில் ஒட்டி ஒப்படைக்க வேண் டும்.
இதன் மூலம் தினசரி குடோனில் எடுத்துச் செல் லப்படும் சிலிண்டர்கள் ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாவட்டத்தில் இன் டேன் நிறுவனம் சார்பில் உள்ள ஏழு ஏஜன்சிகளிலும் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே முறையை மாவட்டத்தில் உள்ள இந்துஸ் தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் காஸ் ஏஜென்சிகளிலும் அமல்படுத்தினால் சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்க முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக