உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்விக்கடன், சிறுதொழில் கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கடன், சிறுதொழில் கடன் மற்றும் தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார்.

ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

           கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (முஸ்லிம், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்கள் நீங்கலாக மற்ற கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சியர்கள்) 2010- 11-ம் ஆண்டுக்கு சிறுதொழில் கடன்கள் வழங்க ரூ. 150 லட்சம், தனிநபர் கடன் வழங்க ரூ. 150 லட்சம், கல்விக் கடன் வழங்க ரூ. 10 லட்சம் அரசு ஒதுக்கி உள்ளது. 

                 மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி மற்றும் பட்டயப் படிப்பு பயிலும், மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இக்கடன்கள் மத்தியக் கூட்டுறவு வங்கிகள், அவற்றின் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், சிறப்பாகச் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும். தனிநபர் கடனுக்கு 6 சதவீதம், சிறுதொழில் கடனுக்கு 4 சதவீதமும், கல்விக் கடனுக்கு 3 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும்.

          கிராமப் பகுதியாக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 39,500-க்கு மிகாமலும், நகரப் பகுதியாக இருந்தால் ரூ. 54,500-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். பள்ளிச் சான்று, சாதிச்சான்று, வருமானச சான்று, இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலே குறிப்பிட்ட வங்கிகள், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆகியவற்றில் சமர்ப்பிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior