திட்டக்குடி:
திட்டக்குடியில் பஸ் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடியில் இருந்து இரவு 8.10 மணிக்கு நாவலூருக்குச் செல்ல வேண்டிய அரசு பஸ் 9.40 மணி வரை பஸ் நிலையத்திற்கு வரவில்லை. நாவலூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் கேட்டனர். மாற்று பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால் பஸ் வராததால் ஆத்திரமடைந்த நாவலூர் செல்லும் கூலித்தொழிலாளர்கள், பொது மக்கள் திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பஸ் விட ஏற்பாடு செய்தார். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக