சிதம் பரம், டிச. 3:
ஸ்ரீ சந்துரு சுவாமிகளால் உருவாக்கப்பட்ட அஷ்டலட்சுமி மகாயந்திரம் 1008 குடும்பங்களும் வழங்கப்பட்டது.
ந டராஜர் கோயிலில் ஒரு நாளும் இடைவிடாமல் 1171 நாள்களுக்கு மேலாக தொடர் அங்கப்பிரதட்சினம் செய்துவருகிறார் ஸ்ரீ சந்துரு சுவாமிகள். இவரால் உருவாக்கப்பட்ட அஷ்டலட்சுமி மஹாயந்திரம் பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கீழசன்னதியில் புதன்கிழமை நடைபெற்றது.÷கடலூர் மாவட்ட ஐயப்ப சேவா சங்கத் தலைவர் ஆடிட்டர் கே.நடராஜ பிரபு, ராஜேஸ்வரி நடராஜ பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்று 1008 குடும்பங்களுக்கு அஷ்டலட்சுமி மஹா யந்திரங்களை வழங்கிப் பேசினார். அப்போது அவர், மக்கள் ஆன்மிகம், மனிதநேயம் தழைத்தோங்கி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என ஸ்ரீ சந்துரு சுவாமிகள் தொடர் அங்கப்பிரதட்சிணம் செய்வது பாராட்டுக்கு உரியது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மனித உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் லோகநடேசன் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர். பின்னர் பஞ்சபூத ஸ்தல மண் எடுத்து செய்யப்பட்ட 1008 மஹா கலசங்களை பக்தர்கள் ஏந்தி வர ஸ்ரீ சந்துரு சுவாமிகள் தேரோடும் வீதிகளில் அங்கப்பிரதட்சிணம் மேற்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக