கட லூர், டிச.3:
முதல்வர் கலைஞரின் உயிர்காக்கும் உயர் மருத்துவ சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டப் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி, 30-8-2009-ல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல் கட்டப் பணி 2-12-2009-ல் முடிவடைந்து உள்ளது. 2-ம் கட்டப்பணி ஒரு வாரத்தில் தொடங்கும்.
முதல் கட்டப் பணியில் எவரேனும் புகைப்படம் எடுக்காமல் விடுபட்டு இருந்தால், 2-ம் கட்டப் பணியின் போது புகைப்படம் எடுத்து திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கெனவே புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் ரூ. 72 ஆயிரத்துக்குக் கீழ் ஆண்டு வருவாய் உள்ளவர்களும் பயன் பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
ரூ. 72 ஆயிரத்துக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், இ.எஸ்.ஐ. திட்ட உறுப்பினர்கள் பயன்பெறத் தகுதி அற்றவர்கள். எனவே தகுதி அற்றவர்கள் இதில் அடையாள அட்டை பெற்று இருந்தால், தாங்களாகவே முன் வந்து, திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பின்னர் விவரம் தெரிந்தால் குற்றவியல் நடவடிக்கை தொடர ஏதுவாகும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக