skip to main |
skip to sidebar
தொடர் மழை எதிரொலி வீராணம் ஏரி நிரம்புகிறது
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிராமங்களின் தெருக்களில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.
காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரிக்கு கருவாட்டு ஓடை வழியாக தண்ணீர் அதி களவு வருகிறது. ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்த மழை நீர் இந்த ஓடை வழியாக வடவாற்றில் கலந்து வீராணம் ஏரிக்கு வருகிறது. நேற்று காலை ஏரியின் நீர் மட்டம் முழு கொள்ள ளவான 47.50 அடியில் 44.50 அடியாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஏரியின் நீர் மட்டத்தை 45 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என ஆட்சியர் கூறியிருப்பதால் ஏரியின் நீர் மட்டத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மழை நீடித்தால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளியங்கால் ஓடையில் உபரி நீர் திறக்கப்பட்டால் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏரியின் நீர் மட்டம் உயரும்பட்சத்தில், முதலில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலமே உபரி நீர் வெளியேற்றுவதற்கு பொதுப்பணித்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் மட்டுமே இந்த இரு வடிகால்கள் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக