சிதம் பரம், டிச. 3:
கடலூர் மாவட்டத்தில் பரவிவரும் விஷக்காய்ச்சலை தடுக்கும் பொருட்டு அனைத்து ஹோட்டல்களிலும் பொதுமக்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் விஷக் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அனைவருக்கும் பரவிவிடுகிறது. காய்ச்சல் வந்து போன பிறகு மூட்டுவலி ஏற்பட்டு அந்த வலிபோக பல மாதங்கள் ஆகிறது. எனவே காய்ச்சிய குடிநீரை பொதுமக்கள் அனைவரும் பருக சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், திரையரங்குகள், டீக்கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சி குடிநீரை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சி.டி.அப்பாவு தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக