சிதம் பரம், டிச. 3:
சிதம்பரத்தில் இறந்து போனவர் பெயரில் வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது நகர போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ÷சிதம்பரத்தை அடுத்த வையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமியின் மனைவி தில்லையம்மாள் (82). இவரது மகள் ராஜலட்சுமி சிதம்பரத்தில் உள்ள வங்கி லாக்கரில் கடந்த 12-3-2009-ல் 51 பவுன் நகையை பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந் நிலையில் ராஜலட்சுமி திடீரென இறந்துவிட்டார், லாக்கருக்கு வாடகை செலுத்துமாறு ராஜலட்சுமி பெயருக்கு வங்கியிலிருந்து கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்துடன் தில்லையம்மாள் வங்கிக்குச் சென்று தனது மகள் பெயரில் உள்ள லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 51 பவுன் நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றார்.
இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்ட போது அந்த நகைகளை தில்லையம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சோமு, வாங்கிச் சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தில்லையம்மாள் தனது மகள் ராஜலட்சுமி பெயரில் லாக்கரில் வைத்திருந்த நகைகளை சோமு, இந்திரா ஆகியோர் மோசடி செய்து எடுத்துச் சென்றதாகவும், அவர்களிடம் நகைகளை அளித்த வங்கி மேலாளர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.
நகர போலீஸôர் 3 பேர் மீது வழக்குப் பதிந்து சோமுவை கைது செய்தனர். மேலும் இந்திரா, வங்கி மேலாளர் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக