நெய்வேலி, டிச. 3:
நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தி அலுவலகத்தை பூட்டினர்.
கெங்கைகொண்டான் தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலராக இருப்பவர் கலியமூர்த்தி. இவர் மீது அவ்வப்போது சில புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை தரக்குறைவாக பேசுவது, துப்புரவுத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.÷மேலும் பேரூராட்சியின் பின்புறம் நடைபெறும் கட்டடப் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.÷இ தைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர்கள்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து வியாழக்கிழமை செயல் அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, அலுவலகத்தைப் பூட்டினர்.
இதையடுத்து ஊமங்கலம் வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் கோதண்டபாணி, மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்களிடமிருந்து சாவியை வாங்கி, மாலையில் அலுவலகத்தை திறந்தனர். இது தொடர்பான புகாரையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குநரிடமும் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளக்கிழமை பார்வையிட இருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளக்கிழமை பார்வையிட இருப்பதாகத் தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக