நெய்வேலி, டிச. 3:
என்எல்சியில் உள்ள இரும்பு இயந்திரங்கள் துருப்பிடிக்காதிருக்க ஆய்வு மேற்கொள்வதற்காக திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் என்எல்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வியாழக்கிழமை மேற்கொண்டது.÷என்எல்சி நிறுவனத்தின் 3 சுரங்கங்களிலும் மழைநீர் மற்றும் நிலத்திலிருந்து கசியும் நீரை வெளியேற்ற விலையுயர்ந்த பல்வேறு நீரேற்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு நீரை வெளியேற்றும்போது இயந்திர பாகங்கள் துருப்பிடித்து வீணாகி நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த இழப்பை தடுக்கும் விதமாக திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் உலோகவியல் துறையுடன் இணைந்து, நீரேற்றும் இயந்திரங்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய என்எல்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ரூ.52 லட்சம் மதிப்பிலான ஆய்வுத் திட்டத்தின் மூலம் துருப்பிடித்தலின் விளைவுகளையும், அளவினையும் ஆய்வு செய்யவும், அதைத் தடுக்க தேவையான பூச்சுக் கலவையை கண்டறிந்து, அந்தக் கலவையை பூசிய பின் ஏற்படும் முன்னேற்றத்தை மதிப்பிடவும் இத் திட்டம் வழிவகுக்கிறது.
இது இரு நிறுவனத்தின் கூட்டு முயற்சி என்பதால் இந்த ஆய்விற்கான செலவுகளை இரு நிறுவனமும் இணைந்து வழங்கவுள்ளன. இந்த ஆய்வுப்பணி 2 ஆண்டுகாலம் நடைபெறும்.

இதற்கான ஒப்பந்தம் என்எல்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. என்எல்சி திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பேராசிரியர் எம்.சிதம்பரம் ஆகியோர் கையெழுத்திட்டு கோப்புகளை பரிமாறிக் கொண்டனர்.÷இந் நிகழ்ச்சியில் என்எல்சியின் நிர்வாகத்துறை இயக்குநர் பி.பாபுராவ், திட்டம் மற்றும் செயலாக்கத்துறை செயல் இயக்குநர் பி.சிவஞானம்,நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு தலைமைப் பொதுமேலாளர் எஸ்.ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக