கடலூர் :
இரண்டு கைகளையும் இழந்த பட்டதாரி பெண் கடலூர் எஸ்பி அலுவலகத்தில் நிலப்பிரச்னை காரணமாக நடத்தப்படும் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் எஸ்பி அலுவலகத்துக்கு இரண்டு கைகளை இழந்த பெண் ஒருவர் நேற்று வந்து, எஸ்பியை சந்திக்க வேண் டும் என கூறியுள்ளார். புகார் குறித்து எஸ்பி அலுவலக போலீசார் விசாரித்தனர். திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்கு எஸ்பி சென்றிருப்பதால் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் குறித்து தெரிவிக்க கூறியுள்ளனர்.
இதையடுத்து தனிப்பிரிவு அலுவலகத்துக்கு சென்ற அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் ஜீவா(28) என தெரிவித்தார். அவர் கூறுகை யில், பிஏ தமிழ் படித்துள்ளதாகவும், விபத்தில் தனது இரண்டு கைகளை யும் இழந்து விட்டதாகவும் கூறினார். கடந்த 22 வருடமாக பக்கத்து வீட்டுக்காரர் நிலப்பிரச்னையில் தன் குடும்பத்தை தாக்கி வருவதாகவும், தந்தையை தவிர வேறு ஆண் நபர்கள் இல்லை, என்றும், தனக்கு 4 இளைய சகோதரிகள் உள்ளதாகவும், இதனால் தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.
இதையடுத்து பண்ருட்டி போலீசாரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு போலீசார் அறிவுறுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக