கட லூர், டிச. 3:
கடலூர் பள்ளி மாணவர்களின் தேனீக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை மாநில அறிவியல் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு பெற்று உள்ளது.
இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் மாநாடு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பின்னர் தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.
பு துக்கோட்டையில் நடந்த மாநில அறிவியல் மாநாட்டில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆதித்யன், அருள்செல்வன், மற்றும் சுதர்சனன் ஆகியோர் சமர்ப்பித்த தேனீக்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை முதல் இடம் பெற்று, தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்துப் பள்ளி முதல்வர் ஆர்.நடராஜன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
அண் மைக்காலமாக கடலூர் நகரில் மாடிக் கட்டடங்கள், ஆற்றுப் பாலங்களின் கீழ்பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் ராட்சத தேனீக்கள் கூடு கட்டியது கண்டுபிடிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினரால் அ ழிக்கப்பட்டது.
காடுகள் அழிந்து வருவதால் தேனீக்கள் அவற்றின் வாழ்விடங்களை விட்டு நகர்ப் புறங்களுக்கு வருகின்றன.
இந் தத் தேனீக்கள் பற்றி எம் பள்ளி மாணவர்கள் பல மாதங்கள் ஆய்வு செய்தனர். வாயு மண்டலத்தில் உள்ள கார்பன் வாயுவை உட்கொண்டு தேனீக்கள் கூடுகட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தங்கள் ஆய்வு அறிக்கையில் மாணவர்கள் சமர்ப்பித்தனர். புவி வெப்பம் அடையக் கார்பன் காரணம் ஆகிறது. எனவே தேனீக்கள் வாயுமண்டலத்தில் உள்ள கார்பனை உறிஞ்சி, கூடுகள் கட்டுவதன் மூலம் புவி வெப்பம் அடைவதை, கணிசமாகக் குறைக்கிறது என்பது மாணவர்கள் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. தேனீக்களை வீட்டுக்கு வீடு வளர்ப்பதை ஊக்குவிப்பதன் மூலம், புவி வெப்பமடைவதைத் தடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய மாணவர்களின் கட்டுரை, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் டிசம்பர் 23-ம் தேதி நடக்க இருக்கும் தேசிய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
கடலூரில் இருந்து மாணவர்களின் ஆய்வு அறிக்கை ஒன்று தேசிய மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றார் முதல்வர். ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்த மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் கி.ராஜேந்திரன் முதல்வர் ஆர்.நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக