சிதம்பரம்:
சிதம்ப ரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் பாபாஜி பிறந்தார். அவர் பிறந்த இடத்தில் தற்போது கோயில் உள்ளது. கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் இங்கு அவதார தின விழா சிறப்புடன் நடைபெறும். இந்த ஆண்டு 1806 அவதார விழாவாகும். இதை யொட்டி உலகெங் கும் உள்ள பாபாஜியின் பக்தர்கள் நேற்று முன்தினம் முதல் கோயிலுக்கு வரத்தொடங்கினர். நேற்று காலை பாபாஜி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கிரியோ பாபாஜி யோக சங்கம் சார்பில் பக்தர் வெங்கடசுப்ரமணியன் தலைமை யில் தியான நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.
மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. 12 மணி நேரம் நடைபெறும் உலக அமைதி மந்த்ரா யாகம் மாலையில் துவங்கியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக