உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக புகார் 100 மையங்களில் இன்று முதல் மறியல்

 கடலூர்,  டிச. 20: 
 
                              திட்டமிட்டு அரசுப் பள்ளிகள் அழிக்கப்படுவதைக் கண்டித்தும் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், 100 மையங்களில் திங்கள்கிழமை முதல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.அப்துல் மஜீது ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அவர் மேலும் கூறியது:  சமச்சீர் கல்வி முறையை வரவேற்கிறோம். ஆனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இது பொருந்துமா, பயிற்றுமொழி எது என்று அரசு தெளிவு படுத்த வேண்டும். பயிற்றுமொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.  
 
                               ஒன்று முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி மட்டும் அல்ல, மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களில் உள்ள பள்ளிகளிலும் இலவசக் கல்வி வழங்க வேண்டும். அதற்காக மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியமும், பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு நிர்வாக மானியமும் வழங்க வேண்டும். தொலை தூரங்களில் இருந்து மாணவர்களை வாகனங்களில் அழைத்து வந்து, விபத்துகளில் குழந்தைகளைப் பறிகொடுக்கும் நிலையைத் தடுக்க மத்திய அரசு நிறைவேற்றி இருக்கும் அண்மைப் பள்ளித் திட்டத்தை அரசு உடனே அமல்படுத்த வேண்டும். காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். தலைமை ஆசிரியர் இல்லாத 381 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்விக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ.11 லட்சம் கோடி கல்விக்கு ஒதுக்கப்பட்டும் அதன் பயன் மாணவர்களைச் சென்றடையவில்லை.  
 
                        6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தியதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தில் ரூ. 200 முதல் ரூ.6,330 வரை குறைந்து விட்டது. இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைக்க முடியவில்லை.  எனவே ஒருநபர் கமிஷனால் பலன் இருப்பதாகத் தெரியவில்லை. 
 
                            எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி 21-12-2009 முதல் 13-1-2010 வரை 100 மையங்களில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்துவர். 21}ம் தேதி கடலூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அனைத்து பிற மாவட்டங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார் அப்துல் மஜீது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior