கடலூர், டிச. 20:
கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் 3 நாள்களாக போலீஸôர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடல் மார்க்கமாக வந்து மும்பை தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் பிற நாடுகள் தளங்களை அமைத்துக் கொண்டு செயல்படுவதால், இந்தியப் பெருங்கடல் வழியாகவும் வங்கக் கடல் வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே வங்கக் கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கியூபிராஞ்ச் போலீஸôர், கடலோரக் காவல்படை போலீஸôர் மற்றும் உள்ளூர் போலீஸôர் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். கடற்கரையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரெட்டிச்சாவடி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை உள்ளிட்ட கடலோரக் காவல் நிலையங்கள் மூலமாக வாகன சோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடலோர கிராமங்களில் யாரேனும் புதிய நபர்கள் காணப்பட்டாலோ, கடலில் வித்தியாசமான படகுகள் தென்பட்டாலோ போலீஸôருக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ் தலைமையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக