பண்ருட்டி :
எனதிரிமங்கலம் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் கண்டரக் கோட்டை சாலை குண் டும், குழியுமாக மாறியுள் ளதால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாற்றில் கடந்தாண்டு அரசு மணல் குவாரி இயங் கியது. இங்கிருந்து மணல் ஏற்றிய லாரிகள் புதுப் பேட்டை, கண்டரக் கோட்டை கிராம சாலைகள் வழியாக சென்னை, கடலூர், விழுப்புரம் உள் ளிட்ட பல பகுதிகளுக்கு சென்றன. இதனால் கிராம சாலைகள் அனைத்தும் ஐல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய பள் ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் குவாரியை மூட வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை புதுப்பிக்க கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.
அதனையேற்று குவாரி மூடப்பட்டது. கடந்த ஐனவரி மாதம் கண்டரக் கோட்டை- திருத்துறையூர் 4 கி.மீ., சாலை 44 லட்சம் ரூபாய் செலவிலும், புதுப் பேட்டை -எனதிரிமங்கலம் 12 கி.மீ., சாலை ஒரு கோடியே ஐந்து லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதுப்பிக் கப்பட்டன. இந்நிலையில் கடந்த 3ம்தேதி முதல் எனதிரிமங் கலம் பெண்ணையாற்றில் மீண்டும் மணல் குவாரி துவங்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றிக் கொண்டு செல்கின்றன. கடந்த 6 நாளாக மழை பெய்து வரும் நிலையில் மணல் லாரிகளின் படையெடுப்பினால் சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சாலையோர வீடுகளில் திருத்துறையூர் கடை வீதி சாலை மண் சாலையாக மாறியுள்ளது. கிராம சாலைகள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டிற்கு பிறகே சீரமைக்கப்படும். ஆனால் சாலை போட்டு 11 மாதத்திலேயே ஐல்லிகள் பெயர்ந்து வீணாகியுள்ளது.
இந்த சாலை வழியாக செல்லும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் உள்ள வீடுகளில் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. இப்பகுதியில் வாகனங்கள் சென்று பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க இப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர். இதற்கு நெடுஞ் சாலை மற்றும் மாவட்ட நிர்வாகம் கிராம சாலைகளை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக