உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

9 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

 கடலூர், டிச. 20: 
 
                    காட்டாமணக்கு விதைகளை சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டது.  
 
                  கடலூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் மாதாகோயில் தெருவில் வசிப்பவர்கள் பழநி, வீராசாமி, ராமலிங்கம். இவர்களின் குழந்தைகள் அபர்ணா (6), அபிநயா (7), ஆசியா (11), அகல்யா (9), அனுசுயா (9), அனிதா (9), வைஷ்ணவி (6), சுபாஷினி (14), வாசுதேவன் (12).  
 
                            ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் இவர்கள் அருகில் உள்ள தோப்பில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது காட்டாமணக்கு விதைகளைப் பறித்து விதையில் வெண்மை நிறத்தில் இருந்த பருப்பை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 9 குழந்தைகளையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior