சிதம்பரம், டிச. 19:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல் கலைக்கழகத்தின் புகழையும், பெருமையையும் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் வீண் வதந்திகள் குறித்தும், பட்டமளிப்பு விழாவை சீர்குலைக்க முயற்சித்தும் வருவதை எதிர்த்து நடைபெற்ற இக் கூட்டத்தில் 6-வது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகை வழங்குவது பற்றிய உண்மை நிலைகள். 1996-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு எதிரான கருத்துகள், தொன்று தொட்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பதவி உயர்வு, பணிப்பயன்கள், வாரிசுகளுக்கு பணி, குழந்தைகளுக்கு கல்விச் சேர்க்கை, கட்டணச் சலுகை உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து பேசினர்.
இக்கூட்டத் தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் நலச்சங்கம், அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர் முன்னேற்றச் சங்கம், எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர் அலுவலர் நலச்சங்கம்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.÷கூட்டுக்குழுவின் இந்த விழிப்புணர்வு பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக