உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

தொழுதூர் அணைக்கட்டில் எரியாத மின்விளக்கால் ஊழியர்கள் அவதி

ராமநத்தம் : 

               தொழுதூர் அணைக் கட்டில் அமைக்கப்பட் டுள்ள எரியாத மின் விளக் குகளால்  பொதுப்பணித் துறை ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 


                     ராமநத்தம் அடுத்த தொழுதூரில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்  வெள்ளாற்றின் குறுக்காக அணைக்கட்டு கட்டப் பட்டது. தற்போது இந்த அணைக்கட்டினை பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பு பிரிவு பராமரித்து வருகிறது. இந்த அணைக்கட்டில் 16 ஷட்டர்கள் அமைக் கப் பட்டு ஒரு பகுதியில் வெலிங்டன் நீர்த்தேக்கத் திற்கு தண்ணீர் கொண்டு செல்லவும், மற்றொரு பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

                    மழை காலங்களில் அணைக்கட்டுக்கு தண்ணீர்  வரத்து அதிகம் உள்ளபோது பொதுப்பணித் துறை ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அணைக்கட்டு பகுதியில் தங்கி வெலிங்டன் வாய்க் கால் மற்றும் அணைக் கட்டு பகுதியில் உள்ள ஷட்டர்களை திறந்து, மூடிட இரவு பகல் பாராமல் செயல்படுவர்.
 

                  ஊழியர்களின் பாதுகாப்பு கருதி அணைக்கட் டின் மேற்பகுதியில் ஏழு மின் கம்பங்கள் அமைக் கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்கம்பங்களில் இருந்த மின் விளக்குகள் மற்றும் சுவிட்சு போர்டுகள் உள்ளிட்டவைகள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட் டுள் ளது. இதனால் ஊழியர்கள் இரவு நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். அணைக்கட்டில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுத் தால்தான் ஊழியர்கள் பயமின்றி நடமாட முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior