உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்கள்

 கடலூர், டிச. 20: 
 
                       காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை (வீராணம் ஏரியின் மேற்குக் கரை பகுதிகள்) கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் பார்வையிட்டார்.  
 
                            அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காட்டுமன்னார்கோவில் வட்டம் சித்தமல்லி, அகரப்புத்தூர், வீராணந்தபுரம், கண்டமங்கலம், நாட்டார் மங்கலம் ஆகிய கிராமங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பெறப்பட்ட தகவல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். சித்தமல்லி, அகரபுத்தூர் கிராமங்களில் செங்கால்ஓடை நீரால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் மணிலாப் பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் வழங்கக் கோரினர்.  
 
                            வயல்களில் தேங்கும் நீர் வடிய, புதிய வடிகால் வாய்க்கால் வெட்டித்தரக் கோரினர். செங்கால் ஓடை உபரிநீரை வெளியேற்ற அதிக கண்மாய்களைக் கொண்ட புதிய பாலம் அமைக்க வேண்டும், செங்கால் ஓடையைத் தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரினர். இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பிவைக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.  
 
                             இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நெல், மணிலா சேதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேளாண் இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வில் வேளாண் இணை இயக்குநர் பாபு, சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் பொதுப்பணித் துறை, வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior