விருத்தாசலம், டிச. 19:
விருத்தாசலத்தில் மளிகைப் பொருள்களின் தரம் குறித்து வெள்ளிக்கிழமையன்று நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
விருத்தாசலத்தில் உள்ள மளிகைக் கடைகளில் தரமற்ற பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், துப்பரவு அலுவலர் பரமசிவம், ஆய்வாளர்கள் ராஜ்குமார், சிவப்பிரகாசம், பாலமுருகன், துப்பரவு மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், முத்தமிழன், செல்வம், சுப்பிரமணியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். காய்கறி மார்க்கெட், பங்களா வீதி, பெரியார் நகர், காட்டுக்கூடலூர் சாலை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தபோது பல்வேறு கடைகளிலிருந்து 350 கிலோ எடையுள்ள, சுமார் ரூ.25,000 மதிப்பிலான தரமற்ற மிளகாய்த்தூள், மல்லிப்பொடி உட்பட பல்வேறு பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக