நெய்வேலி:
சென்னையில் அமையவுள்ள அறிஞர் அண்ணா நூலகத்துக்கு வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, மாணவர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து புத்தகங்களைச் சேகரிக்கும் பணியில் ஓபிஆர் கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அமைய உள்ள அண்ணா நூலகத்துக்கு வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வள்ளலார் குருகுலப் பள்ளியில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களிடம் இருந்து புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஓபிஆர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புத்தகங்களைச் சேகரிக்கும் பணியில் ஓபிஆர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆர்.செல்வராஜ் ஈடுபட்டுள்ளார். அதன்படி திங்கள்கிழமை வள்ளலார் குருகுலப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார் ஆர்.செல்வராஜ். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சிறந்த புத்தகங்களை வழங்க ஆர்முள்ளவர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி புத்தகங்களை வழங்கலாம் என செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக