கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்காததைக் கண்டித்து நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் கல்லூரியின் கவுர விரிவுரையாளர்கள் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பல மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் படாமல் இருந்து வருகிறது. இதனைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து வெளியே சென்றனர்.
உண்ணாவிரதம்:
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 9 பேர் கடந்த 7 நாட்களாக பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியார் கலைக்கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று 8 வது நாளாக கடலூர் கிளைத் தலைவர் நடேசன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் 9 பேரும் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் தொடங்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக