கடலூர்:
விபத்து வழக்கு தொடர்பாக கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் இரு வக்கீல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கடலூரை சேர்ந்த வக்கீல்கள் ஜெய்சங்கர்(45), சந்திரசேகரன் ஆகிய இருவருக்கும் இடையே விபத்து வழக்குகளை நடத்துவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் விபத்தில் இறந்த மதியழகன் வழக்கை நடத்துவதில் போட்டி ஏற்பட்டது. கடலூர் செஷன்ஸ் கோர்ட் நுழைவு வாயில் அருகே நேற்று காலை 11.30 மணியளவில் வக்கீல் கள் ஜெய்சங்கர், சந்திரசேகரனுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வக்கீல்கள் சந்திரசேகரன், கருணாகரன் ஆகியோர் ஜெய்சங்கரை தாக்கினர். ஜெய்சங்கர், சந்திரசேகரனை திருப்பி தாக்கினார்.
காயமடைந்த ஜெய் சங்கர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. கடலூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த வக்கீல் சந்திரசேகரின் காரை, வக்கீல்கள் முகுந்தன், சரவணன்,ஜெய்சங்கர் தாக்கியதில் 5,000 ரூபாய் மதிப்புள்ள கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவங்கள் குறித்து வக்கீல்கள் ஜெய் சங்கர், சந்திரசேகரன் மற்றும் கார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்த குமரேசன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, வக்கீல்கள் சந்திரசேகர், கருணாகரன் மற்றும் முகுந்தன், சரவணன், ஜெய்சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக