உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

முதல்வருக்கு மாநில ஆசிரியர் மன்றம் கோரிக்கை


சிதம்பரம்:

                  6-வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு அறிக்கையை பெற்று,​​ 19-ம் தேதி பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பே மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம்,​​ மாநில அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிதம்பரம் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:​ 
                   
                       6-வது ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு 3 மாத கால அவகாசம் வருகிற மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பட்ஜெட்டுக்கு முன்பே அந்த அறிக்கையை கேட்டு பெற்று முதல்வர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஆசிரியர் சமுதாயம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.​ 1988 முதல் 2006 வரை மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கி வந்தவர் தற்போதைய முதல்வர் கருணாநிதி. தற்போது முரண்பாடு காரணமாக அந்த நிலை தொடரமுடியாத நிலையில் உள்ளது.​ மத்திய அரசு ஆசிரியர்களுக்கான நிகரான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பாக வெளியிட வேண்டும். கல்வியை அடிப்படை வசதியாக கருதி 1-4-2010 முதல் இலவச கட்டாயக் கல்வியையும்,​​ 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உருவாக்கப்படுவர் என்ற அறிவிப்பை வெளியிட்ட மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலுக்கும்,​​ மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

                   தமிழகத்தை பொருத்தவரையில் இலவச கல்வி ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.​ இதன் மூலம் 99 சதவீத மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடி அரசாக செயல்படுகிறது.​ தமிழக சட்டமன்ற திறப்பு விழாவில் கல்வித் துறையில் தமிழக அரசு ரோல்மாடலாக செயல்படுகிறது என பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் 72 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என ஏற்கெனவே அறிவித்துள்ளார்.​ இலவச கட்டாயக் கல்வி தனியார் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும்.​  தற்போது தேசிய கல்வி ஆணையம் மூலம் மத்திய அரசு கல்வித் துறையை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதை கைவிட வேண்டும்.÷கல்வியை மாநில பட்டியலில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.​ அப்படி ஒப்படைத்தால்தான் தமிழக அரசின் தனி இடஒதுக்கீடு மூலம் கிராம மாணவர்கள் முன்னேற பல்வேறு வாய்ப்புகள் ஏற்படும். தமிழகஅரசு நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ளது.​ இந்நிலையில் மத்திய அரசு நுழைவுத் தேர்வு நடத்துவது ஏற்புடையது அல்ல.​ இதனால் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ள தமிழகத்தில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தம் பாதிக்கப்படும் என க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior