உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

மஞ்சள் அறுவடை - சில நுணுக்கங்கள்



மஞ்சள் 9-10 மாதங்களில் அறுவடைக்கு வரும் பயிராகும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்து விழுவதன் மூலம் பயிரின் முதிர்ச்சியை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் பயிரின் தண்டை 10 நாள்களுக்கு முன்பாக தரையின் மேல் மட்டத்தில் 10 செ.மீ. விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மஞ்சளின் ஈரப்பதம் குறைவதுடன் விரைவில் முதிர்ச்சி அடையும். மஞ்சள் கொத்து என்ற கருவியை பயன்படுத்தி மஞ்சளை கொத்தி எடுக்க வேண்டும்.பதப்படுத்துதல்மஞ்சளை பதப்படுத்துதல் முக்கிய நேர்த்தியாகும். ஈர மஞ்சளிலிருந்து ஐந்தில் ஒரு பகுதி பதப்படுத்திய மஞ்சள் கிடைக்கும். பச்சையான மஞ்சளை சுத்தமான நீரில் வேக வைக்க வேண்டும். மஞ்சள் வெந்துவிட்டது என்பதை வேகும் வாசனை வருவதைக் கொண்டு அறியலாம். அப்போது வேக வைப்பதை நிறுத்துவிட்டு விரல் கொண்டு மஞ்சளை அழுத்தி வெந்து விட்டதா என்பதை கண்டறியலாம். அதிகமாகவும் மஞ்சளை வேக வைக்கக்கூடாது. நிறம் மங்கி விடும். மஞ்சளை சரியாக வேக வைக்காவிட்டால் காயவைக்கும்போது மஞ்சள் உடைந்து சிறு சிறு துண்டுகள் ஆகிவிடும்.வேக வைத்த மஞ்சளை வெய்யிலில் 7 செ.மீ. உயரத்துக்கு பரப்பி 15 நாள்கள் வரை காயவைக்க வேண்டும். காய வைக்கப்பட்ட மஞ்சளில் சிறு சிறு வேர்களும், செதில்களும் கலந்து இருந்தால் அதை சுத்தப்படுத்த வேண்டும். மஞ்சளுக்கு மெருகேற்றுவது மிகவும் அவசியம். மெருகேற்றும் கருவியைக் கொண்டோ, கூடைகளைக் கொண்டோ மஞ்சளை மெருகேற்ற வேண்டும். மஞ்சளுக்கு நிறமேற்றுவதும் மிகவும் அவசியம். 100 கிலோ மஞ்சளை மெருகேற்ற படிகாரம் 40 கிராம், மஞ்சள்தூள் 2 கிலோ, ஆமணுக்கு எண்ணெய் 140 கிராம், சோடியம்-பை-சல்பேட் 30 கிராம், ஹைட்ரோ குளோரிக் அமிலம் 30 மி.லி. சேர்த்து தயாரிக்கப்பட்ட கரைசலைக் கொண்டு நிறம் ஏற்றலாம். மஞ்சள் பொடியுடன் ஆல்கஹால் சேர்த்து கரைசல் தயாரித்து மஞ்சளுக்கு நிறம் ஏற்றலாம். மஞ்சளை தரம் பிரித்து விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior