உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

சூரியகாந்தி அறுவடை - செய்ய வேண்டியவை


சூரியகாந்தி அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில் நுட்பங்கள் 
 
               .கடலூர் மாவட்டத்தில் மங்களூர், தொழுதூர், ஆவட்டி, வேப்பூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தற்போது சூரியகாந்தி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.எண்ணெய் வித்துப் பயிரான சூரியகாந்தியில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல லாபமான விலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:சூரியகாந்தி பயிரின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறமாக மாறியும், பூக்கொண்டைகள் பழுப்பு நிறமாக மாறியும் இருந்தால் பயிரை அறுவடை செய்யலாம். விதைகளை சோதித்துப் பார்த்தால் மேல்புறம் கருமையானதாகவும், உட்புறம் வெள்ளை நிறமாகவும், கடினமானதாகவும் இருக்கும். சூரியகாந்தி பூத்தலையை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். பூத்தலையை ஒரே சீராகப் பரப்பி களத்தில் காயவைத்து 3 மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பிவிட வேண்டும்.பூத்தலைகளை அறுவடை செய்தவுடன் வெய்யலில் பரப்பி காயவைக்க வேண்டும்.பூத்தலைகளை குவித்து சேமித்தால் விதைகளை பூஞ்சாணம் தாக்கி மணிகளின் தரம் பாதிக்கப்படும். காய்ந்த பூக்களிலிருந்து விதைகளைப் பிரித்து எடுக்க கதிர் அடிக்கும் இயந்திரம் அல்லது தடிகள் கொண்டு அடித்து பிரிக்க வேண்டும்.பிரித்து எடுத்த விதைகளை காற்றில் தூற்றிவிட்டு அயல் பொருள்களான கல், மண், தூசு, பூக்களின் சருகுகள் மற்றும் இலைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். நல்ல விதையுடன் கலந்துள்ள சுருங்கிய முதிராத விதைகளையும், கெட்டுப் போன விதைகளையும், பூச்சி, நோய் தாக்கிய விதைகளையும் தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும். தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior