உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

கடலூர் மாவட்டத்தில் 1.95 லட்சம் குடிசைகள்

கடலூர்:
 
                கடலூர் மாவட்டத்தில் 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1.95 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாக,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். முதல்வர் கலைஞரின் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி 23-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.​ இதன் முதல் கட்டப் பயிற்சி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.
 
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  கூறியது:
 
               குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் 6 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.​ கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன.​ அவற்றில் 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1.95 லட்சம் குடிசை வீடுகள் உள்ளன.​ 270 கிராமங்களில் தலா 200-க்கும் மேற்பட்ட குடிசைகளும்,​​ 334 கிராமங்களில் தலா 500 குடிசைகளும்,​​ 73 கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடிசைகளும்,​​ 4 கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடிசைகளும் உள்ளன. குடிசை வீடு​களைக் கணக்​கெ​டுக்க பதிவு பெற்ற அலு​வலர்​கள் மூவர் அடங்​கிய 27 குழுக்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளது.​ இவர்​கள் தவிர கிராமங்கள் தோறும் ஊராட்சி எழுத்தர்,​​ கிராம நிர்வாக அலுவலர்,​​ மக்கள் நலப் பணியாளர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் இக் குழுவில் இடம்பெறுவர்.​ இவர்களுக்கு முதல் கட்டப் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு 100 சதவீதம் வெளிப்படையானதாக இருக்கும்.​ அனைத்து குடிசைகளும் கணக்கெடுப்புக்கு உள்படுத்தப்படும்.​ கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்படும் என்றார் ஆட்சியர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior