உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

பல்கலை., மாணவர்கள் இறந்தது குறித்து 48 பேரிடம் அதிகாரி விசாரணை


சிதம்பரம்: 

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள்  இறந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி டி.ஆர்.ஓ., நடராஜன் 48 பேரிடம் விசாரணை செய்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் படித்து வந்த  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  கவுதம்குமார் பிப்ரவரி 28ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். இதனால் வெளிமாநில மாணவர்கள், பல்கலைகழகத்தில் ரகளையில் ஈடுபட்டனர். 

              போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விரட்டியடித்தபோது  தப்பியோடிய மாணவர்கள், சுமித்குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன்குமார் மூவரும் பாலமான் வாய்க்காலில் குதித்து தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு விசாரணை அதிகாரியாக டி.ஆர்.ஓ., நடராஜனை நியமித்தது. இவர்  கடந்த 5ம் தேதி முதற்கட்ட விசாரணையை துவக்கினார்.  இரண்டாம் கட்ட விசாரணை 10ம் தேதி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                பின்னர்  இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் 18ம் தேதி நடக்கும் பொது விசாரணையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், நேரில் ஆஜராகி  கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் பொது விசாரணையை மேற்கொண்டார். அதில் பல்கலைக்கழக ஊழியர்கள் 10 பேர், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 12 பேர், பேராசிரியர்கள் 13 பேர், மா.கம்யூ., பிரமுகர்கள் 3 பேர், இந்திய கம்யூ., பிரமுகர்கள் 5 பேர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒருவர், எஸ்.சி.,-எஸ்.டி., ஆசிரியர் சங்கத்தினர் 4 பேர் உட்பட 48 பேரிடம் விசாரணை நடத்தினார். அடுத்த விசாரணை வரும் 24ம் தேதி நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior