கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 டாஸ்மாக் கடைகளில் 130க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக தினசரி வசூலில் 80 லட்சம் ரூபாய் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கடலூர் நகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டிருந்ததால், குடிபிரியர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக