கடலூர்:
காவலர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காவல்துறையின் ஒட்டுமொத்த நலன்கருதி, ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள காவலர் நலவாரியத்தை அரசு அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு ஈட்டுத் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் 80 வயதைத் தாண்டிய 5 பேர், கூட்டத்தில் கெüரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பி.வடிவேல், பொருளாளர் கே.மணி, லோகையன், ஆர்.காசிநாதன், பி.பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக