உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணி: டி.எஸ்.பி., இளங்கோ துவக்கி வைத்தார்

திட்டக்குடி: 

              திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணியினை டி.எஸ்.பி., இளங்கோ நேற்று துவக்கி வைத்தார். திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேடு, திருக் குளத்திற்குள் கழிவுநீர் விடுவதால் சுகாதாரம் மற்றும் புனிதத்தன்மை சீர்கேட்டினை கண்டித்து கடந்த மாதம் 24ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனர்.

                    இது குறித்து அமைதிக்குழு கூட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்குள் வடிகால் அமைத்து தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான திருக்குளத்தினை தூர்வாரக் கூடாது என ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பிலிருந்து கோர்ட்டில் இடைக்கால தடை பெறப்பட்டது. இது குறித்து நேற்று முன் தினம் தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ, ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து கலந்து ஆலோசனை நடத்தினர்.

                           இதில் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே திருக்குளத்தினை தூர்வாரிட முன் வந்தனர். இதனையேற்ற அதிகாரிகள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தூர்வாரும் பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் திருக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது. குளக்கரையில் சிறப்பு பூஜை செய்து, டி.எஸ்.பி., இளங்கோ திருக் குளத்தில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்து, பணியினை விரைந்து முடிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior