உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

சிதம்பரம் கோவில் உண்டியலில் ரூ. 4.15 லட்சம் வசூல்

சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று ஆறாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் வசூலாகியிருந்தது.

                  சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அடுத்த மூன்று நாளில் முதல் முறையாக பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டது.கோவில் வளாகத்தில் படிப்படியாக ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. உதவி ஆணையர் ஜெகன்நாதன், நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் நேற்று ஆறாவது முறையாக திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் காணிக்கைகளை எண்ணினர். அதில் நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் காணிக்கை வசூலாகியிருந்தது. மேலும், ஏழு கிராம் தங்கம், 86 கிராம் வெள்ளி, அமெரிக்க டாலர் 18, சிங்கப்பூர் வெள்ளி 3, மலேசியா ரிங்கேட் 571, இலங்கை ரூபாய் 80 இருந்தன.கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த ஓராண்டில் இதுவரை உண்டியல் காணிக்கையாக, 17 லட்சத்து 2,934 ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது
நூதன முறையில் திருட முயற்சி: 

               நடராஜர் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. ஏழாவது உண்டியலை திறந்து பணம் எடுத்தபோது, வேட்டி துணியில் கட்டப்பட்ட காந்தம் ஒன்று கிடந்தது. மர்ம நபர் எவரோ காந்தத்தை பயன்படுத்தி உண்டியலில் உள்ள பணத்தை திருட முயன்றுள்ளார். காந்தம் வெளியே வராமல் சிக்கிக் கொண்டதால் அதை விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. காந்தத்தில் 56 ரூபாய்க்கு நாணயங்களும், 45 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 101 ரூபாய் ஒட்டியிருந்தது. கோவில் நிர்வாக அதிகாரி சிவகுமார், சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior