உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

மானியத்துடன் டிஏபி உரம் விற்பனை

சிதம்பரம்:

                பயறு வகைகளுக்கு டிஏபி உரம் தெளிக்க டிஏபி ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் ரூ.200 மானியத்தில் தில்லைவிடங்கள், கிள்ளை, பிச்சாவரம், பு.முட்லூர், பூவாலை மற்றும் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார். 

ரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் கூறியதாவது: 

                       பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நஞ்சை தரிசு உளுந்து மற்றும் பச்சைப்பயறு சில இடங்களில் பூக்கும் தருணத்தில் உள்ளது. பயறு வகைப் பயிர்கள் அதிக காய் பிடிப்பதற்கும், நல்ல திரட்டியான விதைகளைப் பெறவும், அதிக மகசூல் பெறவும் டிஏபி உரக் கரைசலை தெளிப்பது அவசியம். இந்த உரக் கரைசலை பயிர்களுக்கு பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், 15 நாள்கள் கழித்து 2-வது முறையும்  இலைவழி மூலமாக தெளிக்க வேண்டும்.  ஒரு ஏக்கருக்கு தெளிக்க 4 கிலோ டிஏபி தேவை. டிஏபி உரத்தை தெளிப்பதற்கு முதல் நாள் 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் 190 லிட்டர் நீர் கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை வேளையில் செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior