உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

அதிக மகசூல் தரும் காய்கறிகளை விளைவிக்க வேண்டும்: பேராசிரியர் வைத்தியநாதன் அறிவுரை


திட்டக்குடி : 

               விவசாயிகள் அதிக மகசூல் தரும் காய்கறி பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேராசிரியர் வைத்தியநாதன் பேசினார். திட்டக்குடியில் வேளாண்மை பொறியியல் துறை பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை வெலிங்டன் நீர்த்தேக்க திட்ட பயிலரங்கம் நடந்தது. விழுப்புரம் செயற்பொறியாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் நடேசன் வரவேற்றார்.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் குறித்து உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், பாசனப்பகுதி மேன்மை திட் டம் குறித்து இளநிலை பொறியாளர் முருகேசன், மாற்றுப் பயிர்த்திட்டம் குறித்து வேளாண் உதவி அலுவலர் குணசேகரன், மண்ணில் மக்குச்சத்து அதிகரிக்கும் வழி, அறுவடைக்குப்பின் தொழில் நுட்பம் குறித்து விருத்தாசலம் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செல்வராஜ், கண்ணன் பேசினர்.

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் பேசியதாவது:
 
                     உலகம் கணினி மயமாக மாறி வரும் நிலையில் விவசாயத்தை அழிய விடாமல், விவசாய வேலைகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீட்டிற்கு வீடு கிடைத்த மாட்டுச்சாணம் தற்போது கடன் வாங்கும் நிலைக்கு மாறியுள்ளது. ஒரே மரத்தில் நான்கு ரக பயிர்களை விளைவிக்கும் அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. அதிக மகசூல் மற்றும் லாபம் தரும் காய்கறி பயிர்களுக்கு விவசாயிகள் அதிகளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பண்ருட்டி- கடலூர் சாலையில் அமைந்துள்ள பாலூரில் தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் காய்கறி ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு காய்கறி விதைகள், பழக் கன்றுகள், நெல்விதைகள் தரமாக உற்பத்தி செய்து மலிவான விலையில் வழங்கி வருகிறோம். பத்து விதமான காய்கறி விதைகள் அடங்கிய ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு 94424-72103, 04142- 75222 எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு பேராசிரியர் வைத்தியநாதன் பேசினார்.விழாவில் தாஜூதீன், சிதம்பரம் ரவீந்திரன், உழவர்மன்ற தலைவர் வேணுகோபால், பாசன சங்கத் தலைவர்கள் சோமசுந்தரம், மருதாச்சலம், வடிவேல், பொன்னுசாமி, ராஜசேகர், ரங்கநாதன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். உதவி பொறியாளர் செந் தில்குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior