உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சாதனங்களை புறக்கணிக்க வேண்டும்: நீதிபதி ராமபத்திரன் பேச்சு

கடலூர் : 

                 பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சினிமா, "டிவி' தொடர்கள் மற்றும் விளம்பரங்களை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி பேசினார். கடலூரில் பவ்டா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஒன்று கூடல் விழா நடந்தது. பவ்டா இயக்குனர் ஜாஸ்மின் தம்பி தலைமை தாங்கினார். முதுநிலை மேலாளர் பிரேம்குமார் வரவேற்றார். உதவிப் பொதுமேலாளர் கோவிந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராமபத் திரன், மா, வட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பவ்டா கிளை மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

விழாவில் நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது: 

                       சுய உதவிக்குழுக்களின் பெண்கள் ஒன்று கூடி நடத்தப்படும் விழாவில் பாட்டுப்போட்டி, அதிக சாப்பாடு சாப்பிடும் போட்டி என நடத்தப்படுகிறது. இது போன்று போட்டிகளை நடத்துவதை தவிர்த்து பெண்கள் சமூகத்தில் வளர்ச்சி அடையக்கூடிய வகையில் போட் டிகள் நடத்த வேண்டும். அதன் மூலம் பெண்களின் அணுகு முறையும், பார்வையும் மாற வேண்டும். கிராமத்தில் உள்ள ஒரு பெண் கல்வி கற்றால் ஊரே படித்தது போல் என்பார்கள். பெண்கள் ஒரு செய்தியை தெரிந்துக் கொண்டால் அதை மற்றவர்களுக்கு சொல்லாமல் அவர் களால் இருக்க முடியாது. எனவேதான் பெண்களின் கல்வி வலியுறுத்தப்படுகிறது. மேலும் இது போன்ற கூட்டங்களில் பங்கேற்கும் பெண்கள், தங்கள் உரிமைகளை பற்றி தெரிந்துக் கொண்டு மற்றவர்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது போல் லோக்சபா, சட்டசபையிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.மேலும் சமூகத்தில் பெண்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படும்போது உரிமைகளை கேட்டு பெறவேண்டும்.
                பெண்கள் தொட்டாச் சிணுங்கிகளாக இல்லாமல், தங்களது உரிமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை விழாவிற்கு வரும் போது உங்களின் பார்வை மாறியிருக்க வேண்டும். நாட்டிற்காக போராடிய ஜான்சிராணி உள்ளிட்டவர்களை முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு போராடும் திறன் படைத்தவர்களாக திகழவேண்டும். பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களை போகப் பொருட்களாக சித்தரிக்கப்படும் விளம்பரம், சினிமாக்கள், 'டிவி' தொடர்களை புறக்கணிக்க வேண்டும் எனப் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior