கடலூர் :
மறு பயிற்சி முடித்தவர்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1990-91ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். இப் பள்ளிகளை அங்கீகாரம் இல்லாதவை எனக்கூறி அரசு மூடியதால் இங்கு படித்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இங்கு பயிற்சி பெற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1993-94ம் ஆண்டு அரசு பள்ளிகளில் இரண்டு மாதம் புத்தொளி பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் அதுவும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கி பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்தனர். இப்பயிற்சியை முடிக்க எங்களுக்கு 20 ஆண்டுகள் ஆனதால் பயிற்சி முடித்த அனைவரும் தற்போது 40, 50 வயதிற்குட்பட்டவர்கள். எனவே மறு பயிற்சி முடித்தவர்களுக்கு வயது மூப்பினை கணக்கில் கொண்டு இனி நடைபெறும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக