உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

சிதம்பரத்தில் வீடு வாடகை கிடு கிடு : நடுத்தர மக்கள் கடும் அவதி


சிதம்பரம் : 

                   சிதம்பரம் பகுதியில் வீடு வாடகை கட்டணம் உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள சிதம்பரத்தில் நில மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

             விளை நிலங்கள் மற்றும் மக்கள் செல்வதற்கே அஞ்சிய காடு, மேடாக இருந்த பகுதிகள் கூட நகர்களாக மாறிவிட்டன. இதனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் பிசியாக உள்ளது. அதே போன்று சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துவிட்டது. பிரதான நான்கு வீதிகள் மட்டுமே உள்ள நகரில் 25க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரை விற்கப்படுகிறது.
                  பூலோக கைலாயமான சிதம்பரத்தில் ஆகாய ஸ்தலமாக நடராஜர் கோவில் உள்ளது. தரிசித்தால் முக்தி தரும் புண்ணிய ஸ்தலம் என்பதால் இங்கு பல் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் விரும்பி வருகின்றனர். இங்கு ஏதாவது ஒரு பகுதியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.எத்தனை நகர்கள், எத்தனை அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்ததாலும் வீட்டு வாடகையோ நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அண்ணாமலை பல்கலை., இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறலாம். வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் பல்கலையில் வேலை பார்ப்பதால் அவர்கள் தங் கியே ஆக வேண்டிய சூழ் நிலை. அதே போன்று பல் கலை.,யில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட வெளி மாநில மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் விடுதியில் தங்கி இருப்பதைவிட வெளியில் சுதந்திரமாக தங்கியிருக்கவே விரும்புகின்றனர்.

                   வெளி மாநில மாணவ, மாணவிகள் நான்கு, ஐந்து பேர் என கூட்டாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். குறிப்பாக அண் ணாமலைநகர் ஒட்டியுள்ள மாரியப்பா நகர், முத் தையா நகர், ஆட்டா நகர், கே.ஆர்.எம். நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதி முழுவதுமாக பல் கலை., மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சாதாரணமாக 1,500 முதல் 2000 வரை வாடகை வசூலித்து வந்த வீடுகளில் மாணவர்கள் 5000 வரை கொடுத்து தங்கியுள்ளனர். அதேபோன்று சிதம்பரம் நகர பகுதி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மாணவர்கள் கூட்டமாக அதிக வாடகை கொடுத்து தங்கிவிடுகின்றனர் வாடகை அதிகமாக கிடைப்பதால் மாணவர்களுக்கு வாடகை விடவே வீட்டு உரிமையாளர்கள் விரும்புகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கூட சிதம்பரத்தில் வீடு கட்டுவதை ஒரு முதலீடாக செய்து மாதா, மாதம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
                        இப்படியாக சிதம்பரம் நகரில் வீடு வாடகை உயர்ந்துள்ளதால் தனியார் நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்களில் வேலை பார்க்கும் குறைந்த ஊதியம் பெறும் நடுத்தர வர்க் கத்தினர், அதிக வாடகை கொடுத்து தங்க முடியாமல் பாதிக்கப்பட் டுள்ளனர்.வாங்கும் ஊதியத்தில் வாடகை கொடுக்கவே போதாத நிலையில் நகருக்கு ஒதுக்குபுறமான நகர் பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.எனவே வீடுகளில் வாடகை இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும். நகராட்சியில் சொத்துவரி உயர்த்திவிட்டதால் எங்களால் என்ன செய்ய முடியும், வாடகையை உயர்த்த வேண் டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என வீட்டுனர்உரிமையாளர்கள் கூறுகின்றனர். பல்கலை மாணவர்கள் தங்கியிருக்கவும், அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்ப உணவு முறையோடு பல்கலையில் போதுமான அளவு விடுதி வசதியை ஏற்படுத்தினால் நகர பகுதிகளில் வாடகை உயர்வை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் பாதிக்கப்பட்டுவரும் நடுத்தர வர்க்கத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior