உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?​​ அமைச்சருடன் பாமக வாக்குவாதம்



 
 
                 பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது 
 
இது குறித்து நடைபெற்ற விவாதம்:​​
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                சேலம் மாவட்டம் மேச்சேரியில் பாமக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ எங்கள் மீது என்ன வெறுப்பு?​​
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
                மேச்சேரியில் பாமக ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதாக வேல்முருகன் கூறினார்.​ பாமகவினர் தான் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ அதற்குப் பதிலாக திருப்பிக் கொடுத்துள்ளனர்.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
              முதல்வர் இருக்கும் போதே மூத்த அமைச்சர் ஒருவர் திருப்பித் தாக்குவோம் என்கிற தொனியில் பேசுவது சரியல்ல.
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
                 நான் நடந்ததைத்தான் குறிப்பிட்டேன்.​ 27}ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற போது,​​ தேர்தல் பணியாற்றும் சிலரை கட்டி வைத்து உதைக்குமாறு உங்களின் சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ பேசியுள்ளார். 
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
              எந்த இடத்திலும் அவர் அப்படிப் பேசவில்லை.​ அமைச்சர் தவறான தகவலைத் தந்துள்ளார்.
 
ஜி.கே. ​ மணி ​(பாமக):​​ 
 
               தேர்தல் முறைகேடுகள் குறித்து பேச ஆரம்பித்தால் அது குறித்து தனி விவாதமே நடத்த வேண்டியிருக்கும்.​ மேச்சேரியில் திமுகவினரை பாமகவினர் தாக்கியதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.​ அவருக்கு தவறான தகவல் வந்துள்ளது. மார்ச் 25}ம் தேதிக்குப் பிறகு பென்னாகரத்தில் இருந்து வெளியூர் நபர்கள் வெளியேறிவிடுவார்கள்.​ அதன் பிறகு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்போம் என்ற அர்த்தத்தில் தான் "25}ம் தேதிக்கு பிறகு மாற்றம்' என்று சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ பேசினார்.​ கட்டி வைத்து உதைக்குமாறு பேசவில்லை.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                   கட்டி வைத்து உதைக்குமாறு அன்புமணி ராமதாஸ் பேசியதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
             பத்திரிகைகளில் வந்துள்ள செய்தியைத் தான் குறிப்பிட்டேன்.​ வேண்டுமானால் அதனைக் காட்ட தயாராக இருக்கிறேன்.
 
அவை முன்னவர் ​(க.​ அன்பழகன்):​​ 
 
             அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதை மறுத்து பாமகவினர் பேசியதும் பதிவாகியுள்ளது.​ எனவே,​​ அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியதில்லை என்றார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
 
அப்போது, ​​ குறுக்கிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,​​ 
 
                 ""நான் பேசியது உண்மைதான்.​ ஆனாலும் நான் பேசியது பாமகவினரை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்'' என்றார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior