உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

மின் பற்றாக்குறையால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது: செங்கோட்டையன்


கடலூர்: 

                    தி.மு.க., ஆட்சியில் மின் பற்றாக்குறையால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என செங்கோட்டையன் பேசினார். நெய்வேலியில் 18ம் தேதி எம்.ஜி.ஆர்., சிலையை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்து மின் வெட்டை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார். ஜெ., வருகையையொட்டி கடலூரில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். 

தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் பேசியதாவது

                      வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது இயற்கை. ஆனால் மின்தட்டுபாட்டால் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. மின் வெட்டு என்பது செயற்கை. அ.தி.மு.க., ஆட்சியில் மின் உற்பத்தி அதிகரித்தது. தற்போதைய ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை இல்லை. இதனால் விவசாயம், தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. 

                        மாணவர்களால் தேர்வு நேரத்தில் படிக்க முடியவில்லை. கடந்த ஆட்சியில் கரூர், திருப்பூரில் 14 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது 10 ஆயிரம் கோடி மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனைபற்றியெல்லாம் சிந்திக்காமல் கருணாநிதி தன் குடும்பத்தை பற்றி சிந்திக்கிறார். நெய்வேலியில் 18ம் தேதி நடக்கும் சிலை திறப்பு விழாவிற்கு திரண்டு வரவேண்டும் என பேசினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior