கடலூர்:
போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வரும் 12ம் தேதி வரை காவலில் விசாரணை செய்ய கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கடலூரில் 'பெனட்ரில்' இருமல் சிரப் போலியாக தயாரித்தது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இது தொடர் பாக திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஏஜன்சி உரிமையாளர் வள்ளியப்பன் கடந்த 24ம் தேதி கடலூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், வள்ளியப்பனுக்கு உதவிய நண்பர் ஆனந்த்(34), மருந்து விற் பனை பிரதிநிதி முருகேசன்(31) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 35 ஆயிரம் போலி 'பெனட்ரில்' சிரப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்து சிறையில் அடைக் கப்பட்டுள்ள மூவரையும் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் மாஜிஸ் திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சுந்தரம், மூவரையும் வரும் 12ம் தேதி வரை நான்கு நாட்கள் விசாரணை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்பேரில் சிறையில் இருந்த மூவரையும் தங்கள் காவலில் வைத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
downlaod this page as pdf