உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

அண்ணா கிராமத்தில் எண்ணெய் பனை அறுவடை


நெல்லிக்குப்பம்: 

                      அண்ணாகிராமம் வட்டாரத்தில் முதன் முதலில் எண்ணெய் பனை அறுவடை நடந்தது. தமிழகத்தில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் கரும்பு, நெல் பயிர்களுக்கு மாற்றாக எண்ணெய் பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணாகிராமம் வட்டாரத்தில் முதன்முதலாக வாழப்பட்டு பாலகிருஷ்ணன் நிலத்தில் பயிரிடப்பட்ட எண்ணெய் பனை மரத்தில் பழக்குலைகள் அறுவடை விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். விவசாயி ராம்குமார் முன்னிலை வகித்தார்.

வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் அறுவடையை துவக்கி வைத்து கூறியதாவது : 

                   ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் எண்ணெய் பனை பயிரிடலாம். இதற்கு ஆட்கள் தேவையில்லை. ஆடு, மாடுகளால் தொல்லையில்லை, விளைந்த பழங்களை தனியார் நிறுவனம் நேரடியாக டன் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய்க்கு வாங்குகின்றனர் என கூறினார். காவேரி பாமாயில் நிறுவன மேலாளர் சரவணக்குமார், வேளாண்மை அலுவலர் சந்திரராசு, ராமதாஸ், நடராஜன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior