பண்ருட்டி :
பண்ருட்டி எல்.என். புரம் ஸ்டேட் பாங்க் நகரில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பாங்க் நகர் முதல் தெருவில் உள்ள வீடுகளில் முறையான கழிவுநீர் தேக்கத் தொட்டி கட்டாததால் அந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் ஸ்டேட் பாங்க் நகர் விரிவாக்கம், நேரு நகர், வக்கீல் ஆறுமுகம் நகர் ஆகிய நகருக்கு செல்லும் 300 குடும்பத்தினர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இது குறித்து கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் ஊராட்சி தலைவர் சேகர் உடன் கழிவுநீர் ரோட்டில் விடுவதை நிறுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தார். ஆனால் அதன் பின்னரும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக