உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

வடலூரில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து வடலூரில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்




கடலூர்:

                  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து அதிமுக சார்பில் வடலூரில் வியாழக்கிழமை (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

                  டலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை அதிமுக  ஆட்சிக் காலத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தினசரி ஆயிரம்  புற நோயாளிகளுக்கு மேல் வந்துசெல்லக்கூடிய இந்த மருத்துவமனை தற்போது எதற்குமே பயனில்லாத மருத்துவமனையாக விளங்குகிறது.÷இந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு செயலற்ற நிலையில் உள்ளதாகவும், அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறுவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  நாய்கடி, பாம்புக்கடி போன்ற விஷக்கடி மருந்துகள் இல்லாத சூழ்நிலையும், சாதாரண நோய்களுக்குக் கூட வெளியூர் செல்கின்ற நிலைமையும், முதலுதவி கூட செய்ய முடியாத அவலமும்தான் மருத்துவமனையில் நிலவுகிறது.

                    இதன் காரணமாக, விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இதுநாள் வரை வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரமற்ற நிலை நிலவுவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை.

                  வடலூர் பேரூராட்சியிலும் இதே போன்று சுகாதாரமற்ற நிலை காணப்படுவதோடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாத அவலநிலை உள்ளது. எனவே, குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் வடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதிமுக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை எம்.பி. தலைமையிலும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior